அடையாறு ஆற்றில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நபரின் உடலை கிண்டி தீயணைப்புத் துறையினர் மற்றும் திருவான்மியூர் தீயணைப்புத் துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சமீபத்தில் தயாரிப்பாளர் ராஜன் இங்கு தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.