சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த சரவணன்(31), தாய் மற்றும் மகனை தாக்கி காயப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமினில் வெளிவந்த பின், நீதிமன்ற விசாரணையில் ஆஜராகாமல் தலைமறைவானதால், அவரை கைது செய்து ஆஜர்படுத்த சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, போலீசார் அவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.