கொல்கத்தா சென்ற விமானத்தில் கோளறு

117பார்த்தது
கொல்கத்தா சென்ற விமானத்தில் கோளறு
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு நேற்று முன்தினம் இரவு 7.40 மணிக்கு புறப்படவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. 180 பயணிகள் மற்றும் 7 விமான ஊழியர்கள் என மொத்தம் 187 பேர் பயணிக்க இருந்த நிலையில், விமானம் காலதாமதமாக இரவு 10.10 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டது. இரவு 10.15 மணிக்கு ஓடுபாதைக்கு செல்ல முயன்றபோது திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறை விமானி கண்டறிந்தார். உடனடியாக விமான என்ஜினீயர்கள் குழுவினர் வரவழைக்கப்பட்டு பழுது பார்க்கும் பணி நடைபெற்றது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி