எஸ். ஐ. ஆரை கண்டித்து கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

183பார்த்தது
எஸ். ஐ. ஆரை கண்டித்து கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து சென்னை உட்பட 43 இடங்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் தங்கச்சாலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்றார். தூத்துக்குடியில் கனிமொழி தலைமையில், சைதாப்பேட்டையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலும், திருவள்ளூரில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

தொடர்புடைய செய்தி