புரசைவாக்கம்: முதியவர் கொடூர கொலை.. நகை திருட்டு அம்பலம்

277பார்த்தது
புரசைவாக்கம்: முதியவர் கொடூர கொலை.. நகை திருட்டு அம்பலம்
புரசைவாக்கத்தில் தனியாக வசித்து வந்த 61 வயது முதியவர் ந.பாலகிருஷ்ணன், கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு, வீட்டில் இருந்த 15 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதியவருடன் வேலை செய்யும் சக ஊழியரான பீகாரைச் சேர்ந்த ஷியாம் மாத்தோவ் (35) என்பவர் இந்த கொலையைச் செய்துவிட்டு திருடியதாகக் கூறப்படுகிறது. ஷியாம் வீட்டில் சோதனை நடத்திய போலீசார் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை மீட்டனர்.