ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்: மூன்று பேர் கைது

1பார்த்தது
ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்: மூன்று பேர் கைது
நீலாங்கரையைச் சேர்ந்த பச்சையப்பன்(45) மற்றும் கே.கே. நகரைச் சேர்ந்த வெற்றி(43) இருவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர். வேலுாரில் உள்ள இடத்தை விற்பனை செய்வதாக சங்கரிடம் வெற்றி வாங்கிய அட்வான்ஸ் தொகையை பச்சையப்பனிடம் கூறாததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால், பச்சையப்பனிடம் இருந்து பணம் பறிக்க முயன்ற வெற்றி, ஆறு பேருடன் சேர்ந்து நீலாங்கரையில் அவரை காரில் கடத்திச் சென்றார். பூந்தமல்லியில் ஒரு வீட்டில் அடைத்து வைத்து மிரட்டியபோது, பூந்தமல்லி போலீசார் பச்சையப்பனை மீட்டனர். அங்கிருந்த மூன்று பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து கார், ஆட்டோ, பைக் பறிமுதல் செய்தனர். வெற்றி உட்பட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி