சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம் அருகே உள்ள குயப்பேட்டை டிமல்லோஸ் சாலை, ராஜா முத்தையா சாலை, பேசின்பாலம், யானைக்கவுனி வால்டாக்ஸ் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, சூளை போன்ற முக்கிய இடங்களை இணைக்கும் சந்திப்பாகும். இந்த முக்கிய சாலையில் மாநகராட்சி நிர்வாகம் வடிகால்வாய் அமைக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது. இருப்பினும், பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வருவதால் அப்பகுதியில் கடுமையான
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.