தென் சென்னை திருநங்கைகள் விழிகள் அமைப்பின் செயலாளர் துர்காஸ்ரீ, தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். முந்தைய ஆட்சியில் சில திருநங்கைகளுக்கு மட்டுமே மகளிர் உதவித்தொகை கிடைத்ததாகவும், தற்போதைய ஆட்சியில் அனைத்து திருநங்கைகளுக்கும் மகளிர் உதவித்தொகை, இலவச பேருந்து பயணம், மற்றும் பட்டம் பெற்றவர்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.