சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தேனாம்பேட்டை மண்டலம், ஆர். கே. சாலை மற்றும் ஸ்டெர்லிங் சாலையில் பிரதான குடிநீர் குழாய் இணைப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதால், வரும் 9ம் தேதி காலை 10 மணி முதல் 10ம் தேதி காலை 10 மணி வரை தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மண்டலங்களில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்துக்கொள்ளவும், அவசர தேவைகளுக்கு இணையதளத்தில் பதிவு செய்து லாரிகள் மூலம் குடிநீர் பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் அழுத்தம் இல்லாத பகுதிகளுக்கு வழக்கம்போல் லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படும்.