சென்னையில் கருமேகங்கள் ஏன்?: வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சிகளால் சென்னையில் மேகமூட்டம் ஏற்பட்டுள்ளது. வட தமிழக கடற்கரைக்கு அருகே கீழடுக்கு காற்று குவிதல் அதிகரித்துள்ளது. இந்த காற்று குவிப்பு, அதிகரித்த ஈரப்பதம் மற்றும் கடல் காற்று ஆகியவற்றின் கூட்டு விளைவால் சென்னை மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் பரவலான கீழ் மற்றும் நடுத்தர அடுக்கு மேகங்கள் உருவாகியுள்ளன. இதனால் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
