தேனாம்பேட்டையைச் சேர்ந்த 47 வயது பெயின்டர் கணேஷ்குமார், நேற்று முன்தினம் இரவு அண்ணா சாலை வழியாக பைக்கில் கிண்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அண்ணா மேம்பாலத்திலிருந்து இறங்கும்போது, கட்டுப்பாட்டை இழந்த அவரது இருசக்கர வாகனம் சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த கணேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.