சென்னையில், நள்ளிரவில் கிண்டி ஆடு தொட்டி மேம்பாலம் வழியாக பைக்கில் சென்ற ஸ்விக்கி ஊழியர் யோகேஷ், பின்னால் வந்த வாகனம் மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சுவரில் மோதி உயிரிழந்தார். ஹெல்மெட் அணியாத யோகேஷ், காதிலிருந்து ரத்தம் வழிந்து இறந்ததாக கூறப்படுகிறது. அவரது நண்பர் பிரதீஷ் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.