பைக், ஆட்டோக்களை சரக்கு வாகனமாக மாற்றினால் நடவடிக்கை

4பார்த்தது
பைக், ஆட்டோக்களை சரக்கு வாகனமாக மாற்றினால் நடவடிக்கை
தமிழ்நாட்டில் 3 சக்கர ஆட்டோ ரிக்‌ஷா மற்றும் இருசக்கர வாகனங்களை சரக்கு வாகனங்களாகப் பயன்படுத்த தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. ராபிட்டோ, போர்ட்டர் போன்ற செயலிகள் மூலம் சரக்குகளை ஏற்றிச் செல்வதாக வந்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடையை மீறி இயக்கப்படும் வாகனங்கள் சோதனையின் போது கண்டறியப்பட்டால் சிறைபிடிக்கப்படும் என போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். காலை மற்றும் மாலை வேலைகளில் போக்குவரத்து ஆய்வாளர்கள் திடீர் வாகன சோதனைகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி