சென்னை தேனாம்பேட்டை, நல்லான் தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் விஜயகுமார் (43). இவர் குடும்பத்துடன் இரண்டு தளங்கள் கொண்ட சொந்த வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், இவர் வீட்டுக்கு பயன்படுத்தி வந்த மின்சாரத்துக்கு 2020 முதல் 2025 வரை மின் கட்டணம் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். இதை மின் வாரிய ஊழியர்கள் கவனக்குறைவால் கண்டுகொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அண்மையில் இதை கண்டுபிடித்த மின்வாரிய ஊழியர்கள், மின் கட்டணம் செலுத்தப்படாத 5 ஆண்டுகளுக்கு கணக்கிட்டு ரூ. 2. 102.10 லட்சத்தை உடனடியாக கட்டும்படி தெரிவித்துள்ளனர். ஆனால், அவரிடம் அவ்வளவு பணம் இல்லாததாலும், பணத்தை திரட்ட முடியாததாலும் நிலுவை மின் கட்டணத்தை செலுத்தாமல் இருந்துள்ளார்.
இதையடுத்து, கடந்த ஒரு வாரத்துக்கு முன் விஜயகுமார் வீட்டுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மின் கட்டண தொகையை செலுத்துவதற்காக உறவினர் மற்றும் தெரிந்தவர்களிடம் பணம் கேட்டும் கிடைக்காததால் விஜயகுமார் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 6. 306.30 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறி கொக்கியில் சேலை கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உறவினர்கள், உடனடியாக அவரை மீட்டுராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் விஜயகுமார் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.