சென்னை ஆலந்தூர் தொகுதியில், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத ஒருவரை பாஜக வாக்குச்சாவடி முகவராக நியமித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆலந்தூரைச் சேர்ந்த முகேஷ் குமார் என்பவர், தமிழ்நாடு தேர்தல் ஆணையர் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய புகார் கடிதத்தில், வாக்குச்சாவடி முகவராக நியமிக்கப்பட்டுள்ள சுப்பையாவின் பெயர் எந்த வாக்காளர் பட்டியலிலும் இடம்பெறவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.