சென்னையில் பக்கவாத பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ஹெச்.ராஜாவிடமும், அவரது குடும்பத்தினரிடமும் அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் இணைந்து இ.பி.எஸ். நலம் விசாரித்தார். மேலும், மருத்துவர்களிடமும் சிகிச்சை விவரங்களை அவர் கேட்டறிந்தார்.