சென்னை: தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த கும்பல்

50பார்த்தது
சென்னை: தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த கும்பல்
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரை ரகுபதி(30). இந்தநிலையில், துரை ரகுபதி தன் வாடிக்கையாளரின் காரை பணத்தேவைக்காக அடமானம் வைக்க எண்ணி மதுரையைச் சேர்ந்த இடைத்தரகர் பாண்டியன் என்பவரை அணுகியுள்ளார். துரை ரகுபதி இரு தினங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்து உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். 

நேற்று (டிசம்பர் 21) மாலை துரையை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய பாண்டியன் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே சென்னையைச் சேர்ந்த இடைத்தரகர் காத்துக்கொண்டிருப்பதாகவும் காரை எடுத்துக்கொண்டுபோய் அவரிடம் காட்டும்படியும் கூறியுள்ளார்.

 துரை தனது மாருதி பாலினோ காரை எடுத்துக்கொண்டு பாண்டியன் கூறிய இடத்திற்குச் சென்று பார்த்தபோது அங்கு காத்திருந்த இருவர் பாண்டியன் அனுப்பியதாக தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு காரை டெஸ்ட் டிரைவ் செய்ய வேண்டும் என கேட்டுள்ளனர். துரை சம்மதம் தெரிவிக்கவே அவரையும் காரில் அழைத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றுள்ளனர். 

சிறிது தூரம் சென்றவுடன் காரில் ஏறிய ஒருவர், துரை ரகுபதியை சரமாரி தாக்கத் தொடங்கியுள்ளார். எதுவும் புரியாமல் தவித்த துரையிடம், 'பாண்டியன் தங்களுக்கு பணம் தரவேண்டும் என்றும் உடனடியாக அவனை இங்கே வரச்சொல்லுங்கள்' என மிரட்டியுள்ளனர். பின்னர் அங்கு ஏற்கனவே காத்திருந்த 6 பேர் கொண்ட கும்பல் துரை ரகுபதியை கட்டையால் தாக்கி கார் மற்றும் விலை உயர்ந்த செல்போனை பறித்துச் சென்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி