சென்னை: சாலையில் எதிர்த்திசையில் சென்ற அரசு பஸ்

3பார்த்தது
சென்னை: சாலையில் எதிர்த்திசையில் சென்ற அரசு பஸ்
சென்னையின் பூந்தமல்லி அருகே, செம்பரம்பாக்கம் சாலையில் அரசுப் பேருந்து ஒன்று போக்குவரத்து விதிமுறைகளை மீறி எதிர்த்திசையில் சென்றதால், அப்பகுதியில் அரை கிலோமீட்டர் தூரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். பேருந்து நடத்துநர் தலையிட்டு வாகனங்களை ஓரமாகச் செல்ல அறிவுறுத்திய பின்னரே நிலைமை சீரானது. இது போன்ற விதிமீறல்கள் தொடராமல் இருக்க போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.