சென்னை: வெப்பநிலை அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம்

82பார்த்தது
சென்னை: வெப்பநிலை அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பகுதியில் 16 செ. மீ. , மழை பெய்துள்ளது.

அடுத்தபடியாக, கள்ளக்குறிச்சி 15, கோமுகி அணை 12, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி கலயநல்லுார் தலா 11, கள்ளக்குறிச்சி மாவட்டம், சூலாங்குறிச்சி 10, கள்ளக்குறிச்சி மாவட்டம் விருகாவூர், திருவாரூர், திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் தலா, 9 செ. மீ. , மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில், இன்று முதல் நான்கு நாட்களுக்கு இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே நேரம், காலையில் லேசான பனி மூட்டம் காணப்படும்.

தொடர்புடைய செய்தி