கொருக்குப்பேட்டை: பெண்ணுக்கு பாலியல் தொல்லை; ஊழியர் கைது

321பார்த்தது
கொருக்குப்பேட்டை: பெண்ணுக்கு பாலியல் தொல்லை; ஊழியர் கைது
கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த 55 வயது பெண் ஒருவருக்கு வலது கால் பாதத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவரை கவனித்து வந்த ஸ்டான்லி அரசு மருத்துவமனை ஊழியர் சேகர், கடந்த 21-ம் தேதி அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்று டிரஸ்ஸிங் செய்யும்போது பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில், ஆர்.கே. நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சேகரை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி