மின்சாரத் துறை தலைமை அலுவலகத்தில் கடந்த 5 ஆண்டு கால ஒப்பந்தங்கள் குறித்த ஆவணங்கள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ளதாக அமைச்சர் சி. டி. நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முழுமையான விசாரணை நடைபெற்று வருவதாகவும், முதற்கட்ட விசாரணையில் அலுவலகத்திற்கு உள்ளேயே சில பணியாளர்கள் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.