வீடு குத்தகைக்கு தருவதாக கூறி மோசடி: ஒருவர் கைது

2பார்த்தது
வீடு குத்தகைக்கு தருவதாக கூறி மோசடி: ஒருவர் கைது
அயனாவரம் நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த தீனதயாளன் (45) என்பவரிடம், அவரது நண்பர் அப்துல் கரீம் (47) அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டை காட்டி, முதல் கட்டமாக ரூ. 9 லட்சத்தை பாபு என்பவரிடம் பெற்றுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட பாபு, வீட்டையும் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இது குறித்து தீனதயாளன் அளித்த புகாரின்பேரில், அயனாவரம் போலீசார் அப்துல் கரீமை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி