சென்னையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

170பார்த்தது
சென்னையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையங்கள் சார்பில், கிண்டி, ஆலந்துார் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வரும் 22ம் தேதி காலை 10 மணி முதல் 2 மணி வரை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைவரும் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புவோர், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.

தொடர்புடைய செய்தி