சென்னை: வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த தடை: காவல் ஆணையர்

58பார்த்தது
சென்னை: வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த தடை: காவல் ஆணையர்
சென்னை: வள்ளுவர் கோட்டத்தில் இனி போராட்டம் நடத்த அனுமதியில்லை என காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்களால் போக்குவரத்து பாதிப்பும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கோரிக்கை வந்த வண்ணம் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு வரும் காலங்களில் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது. அதற்கு மாற்றாக திருவல்லிகேணி சிவானந்தா சாலையில் போராட்டம் நடத்த இடம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது என்றார்.

தொடர்புடைய செய்தி