சென்னை: நாளை விடுமுறை இல்லை

68பார்த்தது
சென்னை: நாளை விடுமுறை இல்லை
பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை என பரவும் தகவல் வதந்தி என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. "பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை (06.06.2025) தேசிய பொது விடுமுறையை அறிவித்து இருப்பதால் அனைத்து பள்ளிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் செயல்படாது" என்ற இணையதள செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. 

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் அதிகாரபூர்வ வலைத்தளப் பக்கத்தில் கூறியதாவது; இது முற்றிலும் வதந்தி. பரவி வரும் இணையதள செய்தி செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டதாகும். இது போன்ற எந்த அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையும் வெள்ளிக்கிழமை (06.06.2025) அன்று பள்ளிகளும் செயல்படும் என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி