
ராணிப்பேட்டை அருகே வீட்டில் வாலிபர் சடலமாக மீட்பு
ராணிப்பேட்டை மாவட்டம் நந்தியாலம் அடுத்த குறிஞ்சி நகரைச் சேர்ந்த விக்னேஷ் (28) என்பவர் நேற்று பூட்டப்பட்டிருந்த வீட்டில் தூக்கில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து அப்பகுதி மக்கள் இரத்தினகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவரது உடலை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மர்ம மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
































