சென்னை: அதிமுக நிர்வாகி மகன் வீட்டில் கஞ்சா பறிமுதல்

6பார்த்தது
சென்னை: அதிமுக நிர்வாகி மகன் வீட்டில் கஞ்சா பறிமுதல்
சென்னை போரூர் மாதனாங்குப்பத்தில் உள்ள ஒரு வீட்டில் உயர் ரக கஞ்சா பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். அங்கு 700 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த க.சுனில் (21), வருண் (23), விஸ்வேஸ் (22) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட சுனிலின் தந்தை அதிமுக திருவள்ளூர் மாவட்ட ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளராக இருப்பது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி