சென்னை: கற்பூரம் ஏற்றிய மூதாட்டி சேலையில் தீப்பிடித்து உயிரிழப்பு

0பார்த்தது
சென்னை: கற்பூரம் ஏற்றிய மூதாட்டி சேலையில் தீப்பிடித்து உயிரிழப்பு
புழல் அருகே வசித்து வந்த செண்பகவள்ளி (68) என்ற மூதாட்டி, கற்பூரம் ஏற்றியபோது சேலையில் பிடித்து உயிரிழந்தார். துபாயில் வசிக்கும் அவரது மகன், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் புகைமூட்டத்தைக் கண்டு தகவல் தெரிவித்தார். அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்தபோது, மூதாட்டி தீக்காயங்களுடன் மயங்கிக் கிடந்துள்ளார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி