சென்னை: பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது; காங்கிரஸ்

56பார்த்தது
சென்னை: பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது; காங்கிரஸ்
பிரதமர் மோடி தேர்தல் ஆணையத்தில் யாரை நியமிக்க விரும்புகிறாரோ, அவரை நியமித்துத் தான் 2024 மக்களவைத் தேர்தல் நடைபெற்றது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரதமர் மோடி தேர்தல் ஆணையத்தில் யாரை நியமிக்க விரும்புகிறாரோ, அவரை நியமித்துத் தான் 2024 மக்களவைத் தேர்தல் நடைபெறும். அப்படி நியமிக்கப்பட்டவர்கள் பாஜகவின் கைப்பாவையாக செயல்பட்டு வருவது இந்திய ஜனநாயகத்துக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாகும்.  மேலும், தேர்தல் பத்திர நன்கொடைகள் மூலமாக மொத்த நன்கொடையில் 66 சதவிகிதத்தை திரட்டிய பாஜக, தேர்தல் களத்தில் சமநிலைத் தன்மையை சிதைத்து, வெற்றி வாய்ப்புகளை தன்பக்கம் திருப்பிக் கொள்கிறது. தேர்தல் ஆணையத்தின் ஆதரவு, தேர்தல் பத்திர நன்கொடை குவிப்பு, அதிகார பலம் ஆகியவற்றை வைத்துக் கொண்டு தேர்தல் அரசியலில் பாஜக வெற்றி பெற்று வருகிறது. அனைத்து நிலைகளிலும் ஜனநாயகத்துக்கு விரோதமாக பாசிச, சர்வாதிகார ஆட்சியை நடத்தும் பிரதமர் மோடிக்கு எதிராக மக்களின் கருத்துகளை திரட்டுவதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எடுக்கும் முயற்சிகளுக்கு நாட்டு மக்களின் ஆதரவை பெறுவதன் மூலமே ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும் என்று அவர் கூறியுள்ளார்.