எப்ஐஆர் கசிவு விவகாரம் - கே. பாலகிருஷ்ணன் கோரிக்கை

50பார்த்தது
எப்ஐஆர் கசிவு விவகாரம் - கே. பாலகிருஷ்ணன் கோரிக்கை
அண்ணா பல்கலை. , பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எப். ஐ. ஆர். வெளியான பிரச்சினையில் தேசிய தகவல் மையம் மீதும் விசாரணை நடத்திட மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை பற்றிய முதல் தகவல் அறிக்கையின் விபரங்கள் வெளிவந்த வழக்கில், தேசிய தகவல் மையத்தை வழக்கு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து விசாரணை நடத்த வேண்டுமென சி. பி. ஐ(எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமையின் முதல் தகவல் அறிக்கை விபரங்கள், வன்கொடுமைக்குள்ளான பெண் விபரங்களோடு வெளியாகி பரவலான கண்டனம் எழுந்தது.

எனவே, கடுமையான குற்றத்திற்கு காரணமான ஒன்றிய தகவல் முகமை மீதும் வழக்கு பதிய வேண்டுமென்றும், இந்த பாலியல் வன்கொடுமை வழக்கின் விபரங்களை வெளியிட்டு அரசியல் ஆதாயம் தேடும் சதி நோக்கம் உள்ளதா என்பதையும் விசாரிக்க வேண்டுமென சி. பி. ஐ(எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

மேலும், மன உளைச்சலுக்கும், கடும் பாதிப்புக்கும் ஆளாகியுள்ள பெண்ணுக்கு உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி நிவாரணத்தை தாமதமின்றி வழங்க வேண்டுமென்று சி. பி. ஐ(எம்) மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது என்று கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி