நாமக்கல் மாவட்டத்தில் சிறுநீரகக் கொள்ளைக்குப் பிறகு, ஏழைகளைக் குறிவைத்து கல்லீரல் திருட்டும் நடப்பதாக வெளியான செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார். போதைப்பொருள் விற்பனை முதல் மனித உறுப்புத் திருட்டு வரை அனைத்து சட்டவிரோத செயல்களையும் திமுக அரசு ஊக்குவிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் ஏழை மக்களுக்கு உடல் உறுப்புகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லாத சூழலை திமுக அரசு உருவாக்கியுள்ளதாகவும், வரும் தேர்தலில் மக்கள் திமுகவுக்கு பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.