
சென்னை: காரில் எடுத்துச் சென்ற பணம் பறிமுதல்.. போலீசார் விசாரணை
தியாகராயநகரில் வெள்ளி இரவு பாண்டிபஜார் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, நம்பர் பிளேட் இல்லாத சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனர். காரில் இருந்து ரூ. 23.5 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர தொழிலதிபர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், வருமானவரித்துறையிடம் பணம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

















