
கோவையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள்!
கோவை தொப்பம்பட்டி பகுதியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் 52வது பிறந்தநாள் விழாவில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும், நலத்திட்ட உதவிகள், கல்வி உதவித்தொகை, மருத்துவ முகாம், அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர் போன்ற உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் வி. சம்பத்குமார், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.































