சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏற்கனவே உள்ள 226 எஸ்கலேட்டர்களுடன், கூடுதலாக 55 எஸ்கலேட்டர்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. திருமங்கலம், அண்ணா நகர் கிழக்கு மெட்ரோ ரயில் நிலையங்களில் தலா ஐந்து, வடபழனியில் நான்கு என மொத்தம் 27 ரயில் நிலையங்களில் இந்த புதிய எஸ்கலேட்டர்கள் அமைக்கும் பணி நிறைவடைந்து, நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.