தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சென்னையில் 67 போக்குவரத்து பிரிவு எஸ்.ஐ.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருவல்லிக்கேணி எஸ்.ஐ. வெங்கடேசன் நுங்கம்பாக்கத்திற்கும், எழும்பூர் சங்கரநாராயணன் சேத்துப்பட்டுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இந்த பணியிட மாற்றங்களை கூடுதல் கமிஷனர் கார்த்திகேயன் நேற்று உத்தரவிட்டார்.