அரசு கலை கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

0பார்த்தது
அரசு கலை கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். tngasa. in என்ற இணையதளம் மூலம் மே 29 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதில் சிரமம் ஏற்பட்டால், மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி மையங்களை அணுகலாம். மாநிலத்தில் உள்ள 181 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் மொத்தம் 1,26,959 சேர்க்கை இடங்கள் உள்ளன.

தொடர்புடைய செய்தி