சென்னை திருமங்கலம் பாலம் அருகே ஜவர்கலால் வடக்கு சாலை பகுதியில் இன்று காலை சரக்கு ஏற்றி வந்த லாரி பழுதடைந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து போலீசார், லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.