சென்னை: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 18 ஹார்ட் டிஸ்க்குகள் திருட்டு

2பார்த்தது
சென்னை: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 18 ஹார்ட் டிஸ்க்குகள் திருட்டு
சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து, முக்கிய ஆவணங்கள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் 16-17 வார இறுதியில், குறைந்த ஊழியர்கள் இருந்தபோது இந்த திருட்டு நடந்ததாகக் கூறப்படுகிறது. நிலக்கரி கொள்முதல், டெண்டர்கள், மின்மாற்றிகள் வாங்கியது தொடர்பான மின்னணு ஆவணங்கள் மாயமாகியுள்ளன. காகித நகல்கள் பாதுகாப்பாக உள்ள நிலையில், மின்னணு ஆவணங்கள் மட்டும் திருடப்பட்டுள்ளது. அமைச்சர் நிர்மல் குமார், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என எச்சரித்த பிறகு திட்டமிட்டு இந்த திருட்டு நடந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி