சென்னை: கூட்டணியில் தொடருமாறு ஸ்டாலின் அறிவுறுத்தல்

0பார்த்தது
சென்னை: கூட்டணியில் தொடருமாறு ஸ்டாலின் அறிவுறுத்தல்
திமுக சட்டப்பேரவைத் தலைவர் தேர்வு தொடர்பாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையின் போது, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் ஆகியோர் ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது, அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்றும், தேர்தலில் சிறப்பாக உழைத்ததாகவும், கூட்டணியில் தொடருமாறும் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி