சென்னை: விஜய நகர கால சிலைகள் பறிமுதல்; நால்வர் கைது

3பார்த்தது
சென்னை: விஜய நகர கால சிலைகள் பறிமுதல்; நால்வர் கைது
தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர், விஜய நகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்த சுதர்சன விஷ்ணு மற்றும் தேவி உலோகச் சிலைகள் இரண்டைப் பறிமுதல் செய்து, நான்கு பேரைக் கைது செய்துள்ளனர். கடந்த 6ஆம் தேதி தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனத் தணிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான காரில் இருந்த இந்த சிலைகள் கைப்பற்றப்பட்டன. சுமார் 77.300 கிலோ மற்றும் 35.450 கிலோ எடையுள்ள இந்த சிலைகளைக் கடத்த முயன்ற மணிகண்டன், ராமச்சந்திரன், முகிலன், ஜான்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி