பிறப்பு சான்றிதழ் வாட்ஸ்ஆப்பில் பெறும் வசதி அறிமுகம்

199பார்த்தது
பிறப்பு சான்றிதழ் வாட்ஸ்ஆப்பில் பெறும் வசதி அறிமுகம்
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறக்கும்போது, பெற்றோர்களின் கைபேசி எண்ணின் வாட்ஸ்அப்பிற்கு குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் PDF வடிவில் அனுப்பி வைக்கப்படும். மாநகராட்சியின் வாட்ஸ் ஆப் சாட்பாட் எண் 94450 61913 என்ற எண்ணிலும், குழந்தையின் தகவல்களை பதிவு செய்து பெற்றோர்கள் பிறப்புச் சான்றிதழினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இந்த புதிய வசதி மூலம் பெற்றோர்கள் எளிதாக பிறப்புச் சான்றிதழைப் பெற முடியும்.

தொடர்புடைய செய்தி