தனியார் நிறுவனத்தில் லேப்டாப் திருட்டு: வாலிபர் கைது

1பார்த்தது
தனியார் நிறுவனத்தில் லேப்டாப் திருட்டு: வாலிபர் கைது
முகப்பேரைச் சேர்ந்த கந்தகுமார்(43) என்பவர் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறார். கடந்த மார்ச் 10ம் தேதி மாலை நிறுவனத்தை மூடிவிட்டுச் சென்றபோது, மறுநாள் காலை ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த இரண்டு லேப்டாப்கள் திருடு போனது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திருட்டில் ஈடுபட்ட மணி மற்றும் காமேஷ் ஆகிய இருவரை நேற்று முன்தினம் காவல்துறையினர் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி