அதிமுக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தலைமைச் செயலகத்திலேயே இன்று தவெகவில் இணைந்தனர். இதுகுறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள
திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின், இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? என கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள். இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி
பாஜக எதிர்ப்பும் பல்லிளிக்கிறது என சாடியுள்ளார்.