நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டு பிறந்த நாள்: முதல்வர் மரியாதை

76பார்த்தது
நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டு பிறந்த நாள்: முதல்வர் மரியாதை
தமிழக முதல்வர் ஸ்டாலின் இசைமுரசு நாகூர் ஈ.எம். ஹனிபாவின் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், இசைமுரசு நாகூர் ஈ.எம். ஹனிபாவின் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி, அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியதோடு, தமிழ்நாட்டின் நல்லிணக்க வரலாற்றிற்குச் சான்றளிக்கும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ள "ஹபீபி" என்ற திரைப்படத்தில் Artificial Intelligence தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட காலத்தால் அழியாத இசைமுரசு நாகூர் ஹனிபாவின் கம்பீரக்குரலுடன் கூடிய பாடல் குறுந்தகட்டினை வெளியிட்டார். 

தமிழ் இசைக்கும், திரை இசைக்கும் சுமார் 75 ஆண்டுகள் தொண்டாற்றிய நாகூர் இ.எம். ஹனிபாவின் பங்களிப்பை போற்றி பெருமை சேர்க்கும் வகையில், நாகப்பட்டினம் நகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள நாகூர் தைக்கால் தெருவிற்கு "இசைமுரசு நாகூர் ஈ.எம். ஹனிபா தெரு" என்றும், சில்லடி கடற்கரைக்குச் செல்லும் சாலையில் புதுப்பிக்கப்படும் சிறுவர் விளையாட்டுப் பூங்காவிற்கு "இசைமுரசு நாகூர் ஈ.எம். ஹனிபா நூற்றாண்டு நினைவுப் பூங்கா" என்றும் பெயரிட்டு அழைக்க, முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டு, அவரது புகழுக்கு பெருமை சேர்த்தார்.

தொடர்புடைய செய்தி