தமிழகத்தின் புதிய முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான விழா ஏற்பாடுகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகின்றன. புதிய அரசு பொறுப்பேற்கவுள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் நேற்று தலைமைச் செயலாளர் சாய்குமார், உள்துறைச் செயலாளர் மணிவாசன், டிஜிபி சந்தீப்ராய் ரத்தோர், சென்னை மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.