ராயப்பேட்டையில் நிரம்பி வழியும் பாதாள சாக்கடை

11பார்த்தது
சென்னை ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் சாலையில் ஓடுவதால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் எப்போதும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் நிலையில், மெட்ரோ பணிகளும் நடைபெற்று வருகிறது. இதனால், மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.