ரோப் கார் திட்டம்: மெரினா கடற்கரையில் மண் பரிசோதனை

2பார்த்தது
ரோப் கார் திட்டம்: மெரினா கடற்கரையில் மண் பரிசோதனை
சென்னை மாநகராட்சியின் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், மெரினா கடற்கரையில் ரோப் கார் சேவை கொண்டுவரும் பணிகளுக்கு நொச்சிக்குப்பம் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கலங்கரை விளக்கம் அருகே தனியார் நிறுவனம் மண் பரிசோதனை மேற்கொண்டபோது, கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி குறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், தனியார் நிறுவன ஊழியர்கள் பணிகளை நிறுத்திவிட்டு புறப்பட்டுச் சென்றனர். 2024-ம் ஆண்டு டெண்டர் கோரப்பட்டு, தனியார் நிறுவனம் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.