ராயப்பேட்டை ஒயிட் சாலை பகுதியில் தெருநாய்கள் கூட்டமாக நின்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சண்டையிட்டு கொள்கின்றன. மெட்ரோ பணிகள் காரணமாக சாலைகளில் தடுப்பு அமைக்கப்பட்டிருப்பதால், வாகன ஓட்டிகள் கவனமாக சென்றாலும், தெருநாய் தொல்லையால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தெருநாய்களை அப்புறப்படுத்தக் கோரிக்கை விடுத்துள்ளனர்.