வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் நிலையில், சின்னம்மை நோய் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதும், அடிக்கடி கைகளைக் கழுவுவதும் அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.