டெலிவரி ஊழியரிடம் வழிப்பறி செய்த இருவர் கைது

2பார்த்தது
டெலிவரி ஊழியரிடம் வழிப்பறி செய்த இருவர் கைது
சென்னையில், முகப்பேர் பகுதியைச் சேர்ந்த உணவு டெலிவரி ஊழியர் முகமது ரசுல்தீன்(25) கடந்த 20ம் தேதி நுங்கம்பாக்கம் குமரப்பா தெருவில் நின்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 2,000 ரூபாயை பறித்துச் சென்றனர். இது குறித்து முகமது ரசுல்தீன் அளித்த புகாரின் பேரில், நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக்(30) மற்றும் ரோஷன்(20) ஆகியோரை நேற்று கைது செய்தனர். இவர்களில் கார்த்திக் மீது ஏற்கனவே ஏழு வழக்குகளும், ரோஷன் மீது ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது.

தொடர்புடைய செய்தி